[ad_1]





கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத்தம்பாலை பகுதியில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் நிர்மலன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென நிதி நிறுவனத்தை மூடிய நிர்மலன், திவால் ஆனவராக தன்னைக் அறிவிக்க வேண்டும் என திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்தனர்.

திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றம் ஒரு வழக்கறிஞரை ரிசிவராக நியமித்து நிதி நிறுவன சொத்துகளைக் கணக்கெடுக்கும் பணியைச் செய்து வருகிறது. இதில் நிர்மலனின் 120 கோடி மதிப்புள்ள சொத்துகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் 12 இடங்களில் நிர்மலனின் பெயரில் வணிக நிறுவனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கரமனை தேசிய நெடுஞ்சாலையோரம் 65 சென்ட் இடம், அதனருகில் உள்ள வணிக வளாகம் ஜகதி பகுதியில் 3000 சதுர அடி வீடு, கார், பாறசாலை குன்னத்துக்கால்,பெருஞ்சுடவிளை ஆகிய இடங்களில் வணிக வளாகங்கள், சொத்துகள், கழக்கூட்டத்தில் விடுதி தங்கும் கட்டடங்கள், அம்பலமுக்கு என்ற இடத்தில் 36 சென்ட் நிலம், கொல்லம் பகுதியில் ஹோட்டல் கட்டடம், பனயம் என்ற இடத்தில் ரிசாட் கட்ட வாங்கப்பட்ட 3.9 ஏக்கர் காயல் கரையோர நிலம் ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டு திருவனந்தபுரம்  சார்ப்பு நீதிமன்றத்திற்கு  விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன.


நிர்மலனின் பினாமிகள் சொத்துகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ள போதும் அதன் உரிமையாளர்கள் யார் என்று கண்டறியும் பணி தொடர்கிறது. மேலும் விசாரணை தொடர்பாக. தற்போது நிர்மலன் என் பெயரில் உள்ள சொத்துகளை மட்டும் கண்டறிந்து அவற்றை ஏலம் விட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.




கன்னியாகுமரி மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இதுவரை 4366 புகார்கள் அடிப்படையில் 321 கோடி முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன மோசடி குறித்து கேரளத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் முதல்கட்டமாக தமிழக போலீஸாருக்கு உதவியாக மட்டுமே இருந்த நிலையில் மியூசியம் போலீஸாரும் இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு நிர்மலனின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வழக்கு விசாரணையை வேகப்படுத்தியுள்ளது. சுமார் இரண்டு மாத காலமாக நிர்மலன் தலைமறைவாக உள்ளார். அவரைத் தமிழகம் மற்றும் கேரள போலீஸ் கைது செய்ய தீவிரம் காட்டிவருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்