[ad_1]
Chennai: 'ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தமிழகப் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டும்' என்று கோரி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மனு அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலசமஹால் அலுவலகத்தில் விசாரணையை நேற்று தொடங்கினார். முதல்நாளில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சரவணன் ஆஜரான நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயண பாபு, மயில்வாகனன் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மனு அளித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டும்: நீதிபதி ஆறுமுகசாமியிடம் மாணவி நந்தினி மனு
TAGS :
COMMENTS