[ad_1]

ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.






ஹாங்காங் ஓப்பன் பேட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுச்சியை எதிர்கொண்டார். தரவரிசையில் சிந்து 2-ம் இடமும் யமாகுச்சி 5-ம் இடமும் வகிக்கின்றனர். ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சிந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை சிந்து 21-12 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார். அடுத்த செட்டில் யமாகுச்சி கொஞ்சம் நெருக்கடி கொடுத்தார். எனினும், அந்த செட்டையும் சிந்து கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மொத்தம் 37 நிமிடங்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிந்துவும் யமாகுச்சியும் மோதியது இது ஆறாவது முறையாகும். இதில் நான்காவது முறையாக சிந்து வெற்றி பெற்றார். 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");