[ad_1]





ராமேஸ்வரம் மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, படகில் பட்டு சிதறிய துப்பாக்கிக் குண்டு, காயமடைந்த மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது.

புயல்கால சேமிப்பு நிவாரண நிதியைப் படகு உரிமையாளர்களுக்கு வழங்காமல் நிறுத்தியதைக் கண்டித்தும், இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் கடந்த 5 நாள்களாக ராமேஸ்ரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், புயல் கால சேமிப்பு நிவாரண நிதியை அனைத்து மீனவர்களுக்கும் பெற்றுத்தர அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மீனவர்கள் தங்கள் போரட்டத்தைக் கைவிட்டனர்.


இதைத்தொடர்ந்து, 5 நாள்களுக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக இன்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றனர். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்குச் சொந்தமான படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6  மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள், பாரம்பர்யமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளைப் பாய்ச்சியிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன், மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனர்.



அப்போது, இந்திய கடல் பகுதியில் சென்னையிலிருந்து வந்த கடலோர காவல் படைக்குச் சொந்தமான' ராணி அபாக்கா' என்ற கப்பலில் இருந்த வீரர்கள் மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், மீனவர் அந்தோணிபிச்சையின் கைகளில் துப்பாக்கிக் குண்டு சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.


பின்னர், இந்திய கடல் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான படகில் இருந்த மீனவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை  நடத்திய பின்னர், அவர்களை விடுவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை இந்திய கடலோர காவல் படையினர் மறுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு உள்ளான படகிலிருந்து துப்பாக்கிக் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");