[ad_1]
டி.டி.வி தினகரன் மீதான தேசத் துரோக வழக்கை ரத்துசெய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்ட தினகரன் அணி சார்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. அதில், நீட்டுக்கு எதிரான வாசகங்களும் நீட்டை அமல்படுத்திய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சசிகலா மற்றும் தினகரனை வாழ்த்தி, வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ’கட்சியில் களையெடுப்பு தொடரும்’ என்றும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதுதொடர்பாக முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை அவமதிக்கும் வகையில், சேலத்தில் நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரனால் நியமிக்கப்பட்ட சேலம் மாவட்டச் செயலாளர் எஸ்.இ.வெங்கடாசலம் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதுதொடர்பாக, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 14 பேர் மீது சேலம் போலீஸார் தேசத் துரோக வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்நிலையில், இந்த தேசத் துரோக வழக்கை ரத்து செய்யுமாறு கர்நாடகா மாநிலச் செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேசத் துரோக வழக்கிலிருந்து தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்க முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’தினகரன் மீதான தேசத் துரோக வழக்கை ரத்துசெய்ய முடியாது’: மறுத்த உயர் நீதிமன்றம்
TAGS :
COMMENTS