[ad_1]

Coimbatore: கோவையில் செயல்பட்டுவரும், மத்திய அரசின் அச்சகத்தைத் தொடர்ந்து, தற்போது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




கோவை, பிரஸ் காலனியில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவரும், அச்சகத்தை மூட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது அடுத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது மத்திய அரசு. கோவை, உப்பிலிபாளையத்தில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. அதேபோல, அவிநாசி சாலை சித்ரா அருகே பாஸ்போர்ட் சேவை மையம் அமைந்துள்ளது.

இங்கு கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, நாள் ஒன்றுக்கு 750 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இவை, மண்டல அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு, போலீஸ் விசாரணைக்குப் பின்னர், அச்சிடப்பட்டு, தபால் மூலமாக பாஸ்போர்ட்டாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், தட்கல் விண்ணப்பங்கள் மற்றும் குழப்பமான விண்ணப்பங்களை, மண்டல அலுவலகம்தான் நேரடியாக கையாளும். இதன்படி, பார்த்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 பேருக்கு, மண்டல அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தற்போது கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்பட்டால் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.



இதுகுறித்து பாஸ்போர்ட் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "அண்மையில் கேரள மாநிலத்தில், மலப்புரம் பாஸ்போர்ட் மண்டலம், கோழிக்கோடு மண்டலத்துடன் இணைக்கப்பட்டது. மலப்புரம் மண்டலத்தைப் போலத்தான், கோவை மண்டலமும்.

அப்போது முதலே, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை மண்டலத்துடன் இணைக்கப்பட உள்ளதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. கோவை மண்டல அலுவலகத்தைப் பொறுத்தவரை, அது வாடகைக் கட்டடம். மாதம் 3 லட்சம் ரூபாய் அதற்கு வாடகை செலுத்திவருகிறோம். அதேபோல, 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 22 பணியாளர்கள்தான் இருக்கின்றனர். இதனால், கோவை மண்டல அலுவலகத்தை மூட முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.


ஆனால், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, அண்மையில்தான் டிரான்ஸ்ஃபர் ஆனார். தற்போது அந்த இடத்துக்கு விரைவில், வேறு ஒரு அதிகாரியை நியமிப்பதற்கான பணிகளும் நடந்துவருவதாக கூறப்படுகிறது"   என்றனர்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");