[ad_1]
நெல்லையில் ஒரு வாரமாகத் தெரு விளக்குகள் எரியாத நிலையில், வழிபறிக் கொள்ளையர் சங்கத்தின் பெயரில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து அனுப்பப்பட்ட விநோதக் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. இதைப் பராமரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில் அதைக் கண்காணிப்பதில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். அதனால், விளக்குகள் எரியாவிட்டால் பொதுமக்கள் புகார் செய்தாலும் உடனடியாக அதைச் சரி செய்யாத நிலைமையுள்ளது.
ஏற்கெனவே, நெல்லையில் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வரும் சுழலில் தெரு விளக்குகளைச் சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையாளர் சுப்பிரமணியன் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக விடுப்பில் இருக்கும் நிலையில், புதிதாகக் கமிஷனரை நியமிக்கக்கூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலைமையும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு `வழிப்பறி- செயின் அறுப்போர் சங்கம்’ என்ற பெயரில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. நன்றி அறிவிப்புடன் தொடங்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், `வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், குறிச்சி பகுதிகளில் இரவில் தெருவிளக்குகள் வெற்றிகரமாக 7 வது நாளாக எரியவில்லை. எங்கள் தொழிலுக்கு வசதி செய்து கொடுத்த மாநகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிப்பறி- செயின் அறுப்போர் சங்கம் என்ற பெயரில் அதிகாரிகளைக் கலாய்த்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’இப்படியே தொடருங்கள்!’ - அரசு அதிகாரிகளை மிரள வைத்தக் கொள்ளையர்களின் கடிதம்
TAGS :
COMMENTS