[ad_1]

`''அரசு போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகளை அடகுவைத்த தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது'' என்று தி.மு.க செயல்தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

 



மேலும், `அரசு போக்குவரத்துக் கழகத்தின் 490 பேருந்துகள் 44.27 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கழகத்தின் கட்டடங்கள், பேருந்துகள் 2,453 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சொத்துக்கள் மட்டும் 580.63 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கழகத்தின் சொத்துக்களைச் சூறையாடி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அ.தி.மு.க அரசு தடையாக உள்ளது. போக்குவரத்துக் கழகத்தை சிறப்பாக நிர்வகிப்பதில் அரசு துளியும் ஆர்வத்தைக் காட்டவில்லை என்பது இந்நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. ஏழை எளிய மக்களின் போக்குவரத்துக்குப் பயன்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் செய்துள்ள இந்த மோசடி வேதனையளிக்கிறது. அடகுவைத்த பேருந்துகள், பணிமனைகளை மீட்டு, புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.