[ad_1]
' 'பத்மாவதி' படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும்' என்று எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், 'பத்மாவதி'. இந்தப் படத்தில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திர சமூக மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். தற்போது, படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும், தீபிகா படுகோனுக்கு எதிராகவும் மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தநிலையில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 'படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். அந்தப் படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'பத்மாவதி' படத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..! தொடரும் சிக்கல்
TAGS :
COMMENTS