[ad_1]

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகள் சிலவற்றுக்கு மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 




ஆசியாவில் மிகப்பெரிய உயரியல் பூங்கா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா என்ற பெருமையையும் பெற்றது. இங்கு வனவிலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் என பல்வேறு உயிரினங்களை பராமரித்து வரப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது தடுப்பு சுவர்கள் உடைந்து வண்டலூர் பூங்காவில் வெள்ளம் உட்புகுந்தது. இதனால் ஒருசில வனவிலங்குகள் உயிரிழந்தன. ஒருமாதத்தில் பூங்கா சீரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு  வர்தா புயலின் போது வனவியல் பூங்காவில் உள்ள மரங்கள் விழுந்தன. இதனால் பறவைகள், நீலகிரி குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பூங்காவை விட்டு வனப்பகுதிக்கு வெளியேறின. இந்த ஆண்டு பருவ மழைக்காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.




பூங்காவில் உள்ள விலங்குகளில் பாதுகாப்பு குறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ”மழை காரணமாக பூங்காவுக்கு கூட்டம் குறைவாக வருகின்றது. விலங்குகளின் பாதுகாப்பிற்காக நல்ல முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில் மோட்டர்கள் மூலம் நீரை வெளியேற்றி வருகிறோம். சில பகுதிகளில் தண்ணீர் உள்புகாதவாறு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருக்கிறோம். சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தொற்றுநோய் ஏற்படக்கூடாது என்பதற்காக அதிவேக மின்விசிறிகளை அமைத்திருக்கிறோம். இன்னும் கூடுதலாக மின்விசிறிகள் தேவைப்படுவதால் அவற்றையும் வாங்க திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்