[ad_1]





Coimbatore: மேற்கு மண்டலக் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான குறைகேட்பு முகாம், கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.




தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன், தமிழகம் முழுவதும் சென்று, காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்துவருகிறார். அதன்படி, மேற்கு மண்டலக் குறைகேட்புக் கூட்டம், கோவையில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது. இந்தக் குறைதீர்ப்பு முகாமில்,  கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 1,242 போலீஸார் கலந்துகொண்டனர். இவர்கள், தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி டி.ஜி.பி-யிடம் அளித்தனர்.மனுக்களில் இடமாறுதல், பதவி உயர்வு, வழங்கப்பட்ட தண்டனைகளிலிருந்து நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் குறைதீர்ப்பு முகாமில், கோவையில் இருந்து மட்டும் 510 போலீஸார் கலந்துகொண்டனர். மேலும், திருப்பூரிலிருந்து 210 பேரும் நீலகிரியிலிருந்து 110 காவலர்களும் கலந்துகொண்டு மனு அளித்தனர்.




'மனுக்களின்மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று டி.ஜி.பி ராஜேந்திரன் தெரிவித்தார். இந்த முகாமில், கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா மற்றும் மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");