[ad_1]
Ramanathapuram: மாணவிகளுக்கு உதவ, 'சட்ட சேவைப் பெட்டி' திட்டத்தை தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரம் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தில் உள்ள புனித ஆன்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமையில், குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், மாணவிகள் தங்கள் கல்விக் காலத்தில் கல்வியைக் கவனமாகக் கற்பதன் அவசியம் குறித்தும், அவ நம்பிக்கையை விட்டொழித்து தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது குறித்தும், சட்ட உதவிகளால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்குறித்தும், மாணவிகள் பொதுமக்களுக்கான சட்டப் பணிகளில் எப்படி உதவ முடியும் என்பதுகுறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு சட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், 'சட்ட சேவைப் பெட்டி'யை மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார். தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் பள்ளிக்கூடத்தில் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில், சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலாளர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அனில்குமார், பள்ளித் தாளாளர் மனோகரன் மார்ட்டின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மாணவிகளுக்கு உதவ 'சட்ட சேவைப் பெட்டி' திட்டம்; ராமநாதபுரம் பள்ளியில் அறிமுகம்
TAGS :
COMMENTS