[ad_1]

Coimbatore: 

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் குப்பைகள் இருக்கும் பகுதிகள்!


டெங்குக் கொசுவை ஒழிப்பதற்காக கடந்த சிலவாரங்களாக மூச்சுமுட்ட போராடிக்கொண்டிருக்கிறார்கள் கோவை மாநகராட்சி அதிகாரிகள். அகற்றப்படாத குப்பை, தேங்கிய தண்ணீர், கழுவாத தொட்டி, என 'டெங்குக் கொசு வளர்வதற்கு தங்கள் வீடுகளிலோ, வணிக நிறுவனத்திலோ யார்யாரெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்' எனத் தேடித்தேடி அபராதம் போடுகிறார்கள் கோவை மாநகராட்சி அதிகாரிகள். இதுவரை 

39,52,700 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளார்கள். டெங்குக் கொசு எங்கு வளர்கிறது, என்று தேடி அலைந்து அபராதம் போடும் அதிகாரிகள் தங்கள் அலுவலக வளாகத்தைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களா, ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா, கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் ஒரு திடீர் விசிட் அடித்தோம். 

இந்தியாவின் முன்மாதியாக திகழப்போகும் 100 ஸ்மார்ட் சிட்டிகளுள் கோயமுத்தூரும் ஒன்று என்பதற்கு ஆதாரமாய்  நம்மை வரவேற்கிறது ஸ்மார்ட் ட்ரீ.  மாநராட்சி அலுவலகத்தின் முன்பக்கம் பயங்கரச் சுத்தம். இருபக்கமும் சுண்ணாம்பை வட்டவட்டமாகக் கொட்டி சுத்தத்தை ஊருக்குப் பறைசாற்றியிருக்கிறார்கள். 'ச்ச இவங்கள போய் சந்தேகப்பட்டுட்டோமே! என்றெழுந்த குற்ற உணர்ச்சியோடு மாநகராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் போனோம். முன்பக்கம் இருப்பதற்கு நேரெதிராய் இருந்தது பின்பக்கம். சிட்டிக்குள் பறக்கும் பாதிக் கொசுக்கள் அங்கிருந்துதான் உருவாகும் போல!? குற்ற உணர்ச்சி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டது.



மது பாட்டில்களும், குப்பைகளும் நிறைந்த பகுதி

 

நம்ம டாய்லெட் அமைந்திருக்கும் பகுதியை ஒட்டிய பகுதிகள் படுமோசமாக இருந்தது. பயன்பாடற்ற மின் சாதனங்களை எக்கச்சக்கமாகக் குவித்துவைத்திருக்கிறார்கள். கார்ப்பொரேஷன் அலுவலகத்தின் உள்ளே உள்ள மாரியம்மன் கோவிலை ஒட்டியுள்ள ஓர் அறை முழுக்க பழைய டயர்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. பாழடைந்து  கிடக்கும் அந்த அறையில் கொசு மட்டும் அல்ல இன்னும் என்னென்னவோ குடியிருக்கும் போல.! மனசை தேற்றிக்கொண்டு பார்க்கிங் ஏரியாவுக்குப்  போனால் பகீரென ஆகிறது. மாநகராட்சி அலுவலக வளாகம் என்பது மறந்துபோய் ஏதோ குப்பைமேடு பகுதியில் இருப்பதைப் போன்ற உணர்வு தொற்றிக்கொள்கிறது. சாலைகளில் அப்புறப்படுத்தப்பட்ட ப்ளெக்ஸ் பேனர்கள், பழைய டேபிள், சேர்கள், தண்ணீர் தேங்கும் வகையில் கிடக்கும் டப்பாக்கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக்கும் அந்தப் பகுதி பயங்கர மோசமாக இருக்கிறது. இதெல்லாம் கால்தூசுதான். மின்சாரவாரித்துக்குச் சொந்தமான பூட்டிக்கிடக்கும் பண்டகசாலை  முட்புதர்களால் நிறைந்திருக்கிறது. அங்கும் கொசுக்கள் கும்மாளம் போடுகின்றன. டாஸ்மாக் பாருக்கு சாவல் விடும் வகையில் குவிந்து கிடக்கின்றன காலி சரக்குப் பாட்டில்கள்.



மாநகராட்சி கமிஷனர் அறை முன்பு நிறைந்துள்ள குப்பைகள், அம்மா உணவகம் அருகில் தேங்கியுள்ள தண்ணீர்!

அந்த இடத்தில் ஐந்து நிமிடத்திற்குமேல் நிற்கமுடியவில்லை அவ்வளவு கொசு. அங்கு போனால் டெங்கு நிச்சயம். அம்மா மூலிகை உணவகம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் அவ்வளவு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அதன் அருகில் நின்று சில அதிகாரிகள் கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியையும் தண்ணீர் தேங்கியிருக்கும் வீடுகளில் ஆய்வு செய்து அபராதம் போடும் காட்சியையும் ஒரேசேர ஓட்டிப் பார்க்கிறது மனசு. என்ன ஓர் அவலம். யாரை ஏமாற்றுகிறார்கள் இந்த அதிகாரிகள். சில நாள்களுக்கு முன்பு டெங்குக் கொசுவை ஒழிக்க ஒரு வித்தியாச முயற்சியை கையில் எடுத்தது கோவை மாநராட்சி. சமூகவலைதளங்களில் டெங்குஹவுஸ் சேலஞ்ச் என்கிற பெயரில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்யும் படங்களை அந்த ஹேஷ்டேக்கோடு ஃபேஸ்புக்கில் பதியச் சொன்னார்கள். எல்லோரும் அந்த முயற்சியைப் பாராட்டினார்கள். ஆனால், ஊருக்கு உபதேசம் செய்த அதிகாரிகள் தங்கள் வளாகத்தை இவ்வளவு மோசமாக வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய முரண்.

கணத்த இதயத்தோடு கடைசியாக மாநகராட்சி  கமிஷனர் விஜயகார்த்திகேயன் அறைக்குச் சென்றால் கடும் அதிர்ச்சி. அவர் அறைக்கு அருகிலே பழைய டப்பாக்கள், உடைந்த சேர்கள் என அவ்வளவு குப்பைகள்.

ஊரை குறை சொல்லும் முன்பு உன்னை ஒருமுறை பார்த்துக்கொள் என்பார்கள். கோவை மாநகராட்சி உடனடியாகப் பார்க்க வேண்டும்.!

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");