[ad_1]
Puducheri: ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 145 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதில், 55 பேருந்துகள் உள்ளூர் பகுதியான புதுச்சேரியில் இயக்கப்பட்டுவருகின்றன. அவை, ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றும் 200 ஓட்டுநர், நடத்துநர்களால் இயக்கப்பட்டுவருகின்றன. அந்தத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5-ம் தேதி ஊதியம் அளிப்பது வழக்கம். ஆனால், தற்போது 18-ம் தேதி ஆகியும் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து, ஒப்பந்த ஊழியர்கள் இன்று திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், புதுச்சேரியில் உள்ளூர் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பேருந்துகள் அனைத்தும் பணிமனைக்குத் திரும்பிவந்து கொண்டிருக்கின்றன. மேலும், சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என ஓட்டுநர், நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!
TAGS :
COMMENTS