[ad_1]

திரையரங்குகளில் ஒலிக்கப்படும் தேசிய கீதத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடர்ந்து கருத்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவுக்காக சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற ஹீனா சிந்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.




தேசிய கீதம், திரையரங்குகளில் ஒலிக்கப்படுவது குறித்து ஹீனா சிந்து, `தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டாம் என்றால், நீங்கள் பாப்-கார்னை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கலாமா, தொடர்ந்து அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கலாமா, தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும்போது சத்தமாகப் போனில் பேசிக்கொண்டிருக்கலாமா. நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருப்பது குறித்து மிகவும் பெருமை கொள்கிறேன். இதைப் போன்ற சம்பவங்களைப் பற்றி எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்யாமல், ஒரு பதக்கத்தை வாங்குவது என்பது, பாதி சந்தோஷத்தைக்கூட கொடுக்காது' என்று கறாராக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.