[ad_1]
Chennai: புதுச்சேரி பல்கலைக்கழகப் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்காவிட்டால் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யக் கோரி வினோத் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முழுநேர துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்தச் சூழலில் பேராசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் மாணவர்களில் ஒருபிரிவினர் குழுவாக இணைந்து, மற்றொரு தரப்பினரோடு தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ல் நடந்த மோதலில் பல்கலைக்கழகச் சொத்துகள் சூறையாடப்பட்டன. மேலும், பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கங்கள் இணைந்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததுடன், மாணவர்களையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட வற்புறுத்துகின்றனர். இதனால் பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழல் பாதிக்கப்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த 2-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக புதுச்சேரி மாநில டி.ஜி.பி இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தவிட்டிருந்தார். இந்தச் சூழலில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி டி.ஜி.பி. ஆஜராகவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 15-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவில்லை என்றால், புதுச்சேரி டி.ஜி.பி.க்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்து, வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்’: புதுச்சேரி டி.ஜி.பிக்கு நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை
TAGS :
COMMENTS