[ad_1]





ஐ.டி சோதனைக்கு முன்னர் போயஸ்கார்டன் அசுத்தமாக இருந்ததா என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.





ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனிலுள்ள வேதா இல்லத்தில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வருமான வரித்துறையினரின் இந்தச் செயலுக்கு டி.டி.வி.தினகரன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எடப்பாடி அணியிலுள்ள கட்சி நிர்வாகிகளும் வருத்தம் தெரிவித்தனர். மேலும் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தியது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தனர்.

அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா, வருமான வரித்துறை சோதனையால் அசுத்தம் நீங்கியது என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், 'வருமான வரித்துறை சோதனை குறித்து அ.தி.மு.க அணிகளுக்கிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. போயஸ்தோட்ட சோதனை குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக ஓர் அணியைப் பலப்படுத்தி அவர்களுக்கு சீட் வழங்கக் கூடாது. ஐ.டி சோதனையால் போயஸ்தோட்டம் சுத்தமானதாக அன்வர் ராஜா கூறுகிறார். அப்படியென்றால் வருமான வரித்துறை சோதனைக்கு முன்னர் போயஸ்கார்டன் அசுத்தமாக இருந்ததா' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");