[ad_1]
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்துவதில், மிரட்டல் விடுப்பதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில், கோவை சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர் பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஜி.கே.நகரில் வசித்து வருகிறோம். கோவை, விமான நிலையம் விரிவாக்கம் காரணமாக நிலம் கையகப்படுத்த உள்ளதாக அறிகிறோம். ஆனால், தற்போதுவரை இந்த விவகாரம் தொடர்பாக, எங்களது கருத்தைக் கேட்க யாரும் முன்வரவில்லை.
எங்களது நிலங்களை முறையாக, விவசாய நிலங்கள், காலி மனையிடங்கள், வீட்டு இடங்கள், தொழிற்சாலைகள் என முறையாகப் பிரித்து அனைத்துத் தரப்பினரையும் கலந்தாய வேண்டும். எங்களின் பங்கீடு இன்றி எடுத்த, எடுக்கப்படும் எந்த முடிவுகளும் எங்களை கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதுதொடர்பாக தனிக்கலந்தாய்வு கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த விஜய் விக்ரம் கூறுகையில், "எங்களது பகுதியில் ஒரு சென்ட் நிலம் சுமார் 15 லட்சம் மதிப்புடையது. ஆனால், அவற்றுக்கு லட்ச ரூபாய்தான் தர முடியும் என ரவுடிகளை வைத்து, மிரட்டுகின்றனர். அடிக்கடி இரவு நேரத்தில் வரும் ரவுடிகள், நிலத்தை அவர்கள் சொன்ன விலைக்குத் தராவிடின் கொன்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர்" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
"ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள்.." கோவை விமான நிலைய விரிவாக்க சோகம்
TAGS :
COMMENTS