[ad_1]
வறுமையின் காரணத்தால் ஒருவர் பிச்சையெடுப்பது குற்றமாகாது என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தக் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் பிச்சையெடுப்பவர்களுக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் கூடிய இரு மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இதுபற்றி பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு மத்திய அரசு நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “வறுமை காரணமாக ஒருவர் பிச்சையெடுப்பது குற்றம் அல்ல. ஒருவர் தாமாக விரும்பி பிச்சையெடுத்தாலோ, கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைக்கப்பட்டாலோ அது கட்டாயம் கைது நடவடிக்கை ஆளாக்கப்பட வேண்டியது. நம் நாட்டில் 20 மாநிலங்களும், 2 யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கென பிச்சையெடுத்தல் தடுப்புச்சட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. அந்தச் சட்டங்களில் மாநில அரசுகள் தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.மத்திய அரசின் இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். “யாரேனும் சொந்த விருப்பத்திலோ அல்லது கட்டாயத்திலோ பிச்சை எடுப்பார்களா? அப்படி யாரையேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்று நீதிபதிகள் எதிர் கேள்வி எழுப்பினார்கள். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இந்த மனுக்கள் மீதான அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வாதம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'வறுமையால் பிச்சையெடுப்பது குற்றமல்ல..!'- சர்ச்சையைக் கிளப்பும் மத்திய அரசின் வாதம்
TAGS :
COMMENTS