[ad_1]
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்ப கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரமில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `ராமநாதபுரம் திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள கடற்கரை புறம்போக்கு நிலத்தில் 2 சென்ட் இடத்தில் நண்டு, மீன் போன்றவற்றை வியாபாரம் செய்துவருகிறேன். இந்தநிலையில் தொண்டி கிராம நிர்வாக அதிகாரி என்னுடைய கடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது. எனவே, அவர் அனுப்பிய நோட்டீஸை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றுவதற்கு கையெழுத்திட்டு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குத்தான் உண்டு. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன்படி கிராம நிர்வாக அதிகாரிக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. ஆனால், அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் சட்டப்படிதான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொண்டி கிராம நிர்வாக அதிகாரி வழங்கிய நோட்டீஸை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிட்டனர், மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் அறிவுறுத்தினர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
வி.ஏ.ஓ-வுக்கு நோட்டீஸ் கொடுக்க அதிகாரம் கிடையாது! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
TAGS :
COMMENTS