[ad_1]
நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சென்னை சென்ற ரயில் பெட்டியில் அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு பூச்செடிகள் கொண்டு செல்லப்பட்டன. ரயில் பெட்டியின் வாசலை அதனால் மறித்து மூடியதால் பயணிகள் ஏறவும் இறங்கவும் முடியாமல் சிரமப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சென்னைக்குத் தினந்தோறும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் செல்கிறது. செங்கோட்டையிலிருந்து நேற்று மாலை புறப்பட்ட அந்த ரயிலில் காவல்துறை அதிகாரி ஒருவர் பயணம் செய்துள்ளார். அவரது வீட்டுக்கு தென்னங்கன்று, பூச்செடிகள், மூலிகைச் செடிகள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன. அவற்றை அட்டைப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருந்த போலீஸார், அவற்றை முன்பதிவு செய்யப்பட்ட கோச்சில் ஏற்றினர்.
ரயில் பெட்டியின் வாசல் அருகே அவற்றைப் பத்திரமாக வைத்த போலீஸார், அந்த வாயிலின் கதவைப் பூட்டினார்கள். அத்துடன், அதை யாரும் திறந்துவிடக் கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதனால், அந்தக் கோச்சில் ஏற வேண்டிய பயணிகளால் ஏற முடியவில்லை. அவர்கள் அடுத்துள்ள கோச்சில் ஏறி தங்களது இருக்கைக்கு வந்தார்கள். வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகளுடன் வந்தவர்கள் என அனைவருக்கும் இதுவே நிலையாக இருந்தது.
இந்த நிலையில், ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் உள்ளே வந்த டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்தவர்களை மிரட்டும் வகையில், ‘யப்பா... கோச்சின் கதவை மறிச்சு பொருள்களை வைச்சிருக்கிறது யாரு? அதையெல்லாம் வேற இடத்துல எடுத்து வச்சிருங்க’ எனச் சத்தம் போட்டார். அவரது கோபத்தைப் பார்த்த பயணிகள், நல்லது நடக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்தப் பொருள்கள் காவல்துறை அதிகாரிக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்ததும் அவர் சத்தமின்றி சென்றுவிட்டார்.
அதன் பின்னர், அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவர், ‘யார் வந்து தட்டினாலும் கதவைத் திறக்கக் கூடாது. யார் கேட்டாலும் அதிகாரியோட பொருள்கள்னு சொல்லணும்’ என மிரட்டும் தொனியில் தெரிவித்துவிட்டுச் சென்றார். அந்தப் பொருள்கள் அனைத்தும் திருச்சியில் இறக்கப்பட்டன. அது வரையிலும் அந்த கோச்சின் கதவுகள் திறக்கப்படாமல் மூடியே கிடந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளனார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ரயிலில் பயணித்த போலீஸ் அதிகாரியின் அத்துமீறல்! ரயில் பெட்டியின் கதவை மூடியதால் பயணிகள் அவதி
TAGS :
COMMENTS