[ad_1]
முன்னாள் எம்எல்ஏ இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட தினகரன் துக்க வீட்டில் அரசியல் பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வீரகபிலன் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். 2001-ம் ஆண்டு பேராவூரணி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீரகபிலன். 2006-ல் நடைபெற்ற தேர்தலில் இவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் விரக்தியில் இருந்தவர், தனது குலத்தொழிலான ஜோதிடர் தொழிலை கவனித்து வந்தார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தினகரன் அணியில் சேர்ந்தார். அவரது மரணம் குறித்து தினகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எத்தனை மணி ஆனாலும் வந்துவிடுவேன் என்று சொன்ன தினகரன் இரவு 9 மணிக்குத்தான் எம்எல்ஏவின் சொந்த ஊரான திருச்சிற்றம்பலத்திற்கு வந்தார். வருவதற்கு நேரமாகிறது என்பதால் எம்எல்ஏவின் உடல் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்வதற்காக சாலையில் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். தினகரன் வருவது தெரிவிக்கப்பட்ட சாலையிலேயே எம்எல்ஏவின் உடல் தாங்கிய சவவண்டி நிறுத்தப்பட்டிருந்தது. தினகரன் வந்ததும், தீச்சட்டி ஏந்திவந்த எம்எல்ஏ வீரகபிலனின் மகன்களுக்கு ஆறுதல் சொன்னவர், எம்எல்ஏவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, துக்க வீட்டில் அரசியல் பேச வேண்டாமென பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார். தினகரன் வருகைக்காக துக்க வீட்டிற்கு மாலை 6.30 மணிக்கு வந்த திவாகரன், தினகரன் வரும்வரை காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
வருகைக்காக காத்திருந்த திவாகரன்... அரசியல் வேண்டாமெனக் கூறி குட்பை சொன்ன தினகரன்!
TAGS :
COMMENTS