[ad_1]






 Dindigul: 

திண்டுக்கல் மாவட்டத்தில், வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டங்களில், மாவட்டத்தில் உள்ள அனைத்து முதல்நிலை அதிகாரிகளும் கலந்துக்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான அதிகாரிகள் இந்தக் கூட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை. இதனால், பொதுமக்களின் மனுக்கள்மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதைப் புரிந்துக்கொண்ட திண்டுக்கல் கலெக்டர் டாக்டர்.வினய், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டங்களில் அனைத்து அதிகாரிகளும் கலந்துக்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத பணிச்சூழலின்போது அடுத்த நிலையிலுள்ள அலுவலரை அனுப்பலாம். அதே நேரத்தில், மாதத்தின் முதல் திங்கட்கிழமை நடக்கும் கூட்டத்தில் முதல்நிலை அதிகாரிகள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று காலை திண்டுக்கல் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. புகார் மனுக்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து அதிகாரிகளிடம் விசாரணைசெய்துகொண்டிருந்தார் கலெக்டர். அப்போது, பல அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால் கடுப்பான கலெக்டர், முதல்நிலை அலுவலர்களைத் தவிர மற்றவர்கள் எழுந்து நில்லுங்கள் என்றார்.எழுந்துநின்ற கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்துபோன கலெக்டர், அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார். அத்துடன், கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த அதிரடியால், அதிகாரிகள் அரண்டுகிடக்கிறார்கள். இரண்டாம்நிலை அதிகாரிகள் வெளியேறியதால், கூட்ட அரங்கமே காலியாக இருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்