[ad_1]
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினரை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார். பாதிக்கப்பட்ட மீனவர்களை உரிய முதலுதவி கூட செய்யாமல் அனுப்பிய கடலோர காவல்படையினரின் செயல் மனிதாபிமானம் அற்றது என குற்றம் சாட்டினார்.
இந்திய கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயமடைந்த நிலையில் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்த அமைச்சர் மணிகண்டன் ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு நிதியுதவி அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், ''இந்திய கடலோர காவல் படையினரால் நமது மீனவர்கள் தாக்கப்பட்ட நிலையில் அதன் அதிகாரிகளோ மீனவர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என கூறினார்கள். அதற்கு நேர்மாறாக மீனவர்களுடன் கூட்டம் நடத்தி அதில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இந்திய கடலோர காவல்படையினர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகிறது. இதுவரை இலங்கை கடற்படையினரால்தான் நமது மீனவர்கள் தாக்கப்பட்டனர். தற்போது நமது கடலோர காவல்படையே நம் மீனவர்களை தாக்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்க செயலாகும். இந்த செயல் வேலியே பயிரை மேய்வது போன்று உள்ளது.
இதைவிட கொடுமை என்னவென்றால் சம்பவம் நடந்து இரண்டு நாள் ஆன நிலையில் நானே டெல்லியில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூற வந்துவிட்டேன். ஆனால் தாக்குதல் நடத்திய அதிகாரிகள் பக்கத்திலேயே இருந்தும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி செய்யவோ, அல்லது ஆறுதல் கூறவோ இது வரைக்கும் வரவில்லை. அவர்களது இந்த செயலை பார்க்கும் போது மனித நேயம் செத்துவிட்டது என நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் இருக்கும் கப்பலில் அனைத்து வசதிகளும் இருக்கும் அப்படி இருந்தும் ஏன் அவர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி செய்யவில்லை. இப்போதுதான் எங்கள் மீனவர்களை அழைத்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இனி இது போன்று நடக்காது எனவும் கூறியுள்ளனர். ஆனாலும் நடந்த சம்பவத்திற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் மூலம் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சருக்கு வலியுறுத்துவோம்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மீனவர்களை தாக்கிய கடலோர காவல்படையினருக்கு அமைச்சர் மணிகண்டன் கண்டனம்
TAGS :
COMMENTS