[ad_1]





அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டுத்தொகை வழங்கவேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படாததால் தூத்துக்குடியில் இன்று நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடிக்கு, தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தினர் கறுப்புக்கொடி காட்டி, விஷம் குடிக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர், இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமியை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.




 

கடந்த 2015-16 மற்றும் 2015 -17-ம் ஆண்டுக்கான நிலுவையிலுள்ள காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு அளித்திடக் கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு  2015-16-ம் ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம், உளுந்து ஆகிய பயிர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. மற்ற மானாவாரிப் பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், அனைத்துப் பயிர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கிட வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை கடந்த 13-ம் தேதி, முற்றுகையிட்டு திருவோடு ஏந்தும் போராட்டத்தில் தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டனர். இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக தூத்துக்குடிக்கு வர இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒட்டுமொத்த விவசாயிகள் சேர்ந்து கறுப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதோடு, முதல்வர் முன்பு விஷம் குடிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், சங்கத்தலைவர் நாராயணசாமியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைதுசெய்துள்ளனர்.


இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்த சில விவசாயிகளிடம் பேசினோம், ’கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் கலந்துகொள்ள கழுகுமலை அருகிலுள்ள செட்டிகுறிச்சி கிராமத்திலுள்ள விவசாயிகளை அழைப்பதற்காக நாராயணசாமி சென்றார்.  அப்போது பேச்சுவார்த்தைக்காக கோவில்பட்டி டி.எஸ்.பி. அழைப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்ற போலீஸார், தனியார் விடுதியில் வைத்துள்ளனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு முதல்வர் தூத்துக்குடிக்கு வருகை தந்தபோதே சிந்தலக்கரை கிராமம் முன்பு முதல்வர் கார் வரும் வழியில் கறுப்புக்கொடி காட்ட முயன்றோம். அதேபோல இந்தமுறையும் நடந்துவிடக்கூடாது என்பதால் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் உத்தரவால் இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது. இருப்பினும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுதோறும் கறுப்புக்கொடி ஏற்ற உள்ளோம்’ என்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");