[ad_1]
மனிதர்கள், யானைகளுக்கு விளைவிக்கும் தீங்குகளை தத்ரூபமாகப் படம்பிடித்த வன உயிரினப் புகைப்படக் கலைஞர் பிப்லா ஹசாராவுக்கு, இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை மும்பையைச் சேர்ந்த Sanctuary Nature Foundation அமைப்பு வழங்கியுள்ளது.
Credit: Sanctuary Nature Foundation
மேற்கு வங்கம் பங்குரா மாவட்டத்தில், குட்டியுடன் தாய் யானை சாலையைக் கடக்கும்போது, அதன்மீது கும்பல் ஒன்று நெருப்பை கொழுத்திப்போடுகின்றது. அதில், குட்டி யானையின் உடல் தீப்பற்றி எரிகிறது. இந்தக் காட்சியை பிப்லா புகைப்படமாகப் பதிவு செய்திருந்தார்.
பிப்லா ஹஸ்ரா, செங்கற்சூளை ஒன்று நடத்திவருகிறார். வன உயிரினங்கள்மீது கொண்டுள்ள ஆர்வத்தால், காடுகளைக் காப்பதுகுறித்து விழிப்பு உணர்வும் ஏற்படுத்திவருகிறார். விருது வென்றதுகுறித்து அவர் கூறுகையில்''தமிழகம், கர்நாடகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், யானை- மனிதர் மோதல் அதிகரித்துவருகிறது. இதனால், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, யானைகளும் கொல்லப்படுகின்றன. யானைகளின் வாழ்விடங்களை அழிப்பதும் அவற்றுக்குத் தீங்கு விளைவிப்பதும் நம்மை நாமே அழித்துக்கொள்வதற்குச் சமம். உயிர்ச் சங்கிலியின் அதிமுக்கியமான யானை இனத்தைக் காப்பதுகுறித்த அவசியத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் '' என்றார்.
ஆசியா முழுவதும் 5 ஆயிரம் புகைப்படங்களிலிருந்து சிறந்த புகைப்படமாக பிப்லா ஹஸ்ராவின் புகைப்படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. வன உயிரினப் புகைப்படக் கலைஞர்கள் பிட்டு சாகல் ( Sanctuary Asia editor), ஸ்டீவ் வின்டர் (National Geographic) நடுவர்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
குட்டி யானைக்கு தீ வைத்த கும்பல்! - அதிரவைத்த புகைப்படத்துக்கு விருது
TAGS :
COMMENTS