[ad_1]
பாக் நீரிணைப் பகுதியில் போதுமான மீன் வரத்து இல்லாததால் நாகை மாவட்ட மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
வங்கக் கடலின் பாக் நீரிணைப் பகுதியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கைக் கடற்படை சிறைபிடித்துச் செல்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
ஏற்கெனவே பருவநிலை மாற்றம், பாரம்பர்ய பகுதிகளில் மீன்வளம் குறைவு, பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தற்போது இலங்கைக் கடற்படையினராலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல லட்ச ரூபாய்களை முதலீடு செய்த மீனவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதனிடையே தற்போது கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் மீன்வளம் அதிகரித்து அதிக அளவில் மீன்கள் வர தொடங்கியுள்ளன. இதையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் தங்கள் படகுகளுடன் கொச்சி கடல் பகுதிக்குத் தொழில் தேடி இடம் பெயர்ந்து சென்றனர். இதற்கென நாகையிலிருந்து கிளம்பிய படகுகள் சில இன்று பாம்பன் ஹெர்சர் தூக்குப் பாலத்தின் வழியாக கொச்சி நோக்கி சென்றன.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பாக் நீரிணையில் மீன்வளம் குறைந்தது... இடம்பெயர்ந்த நாகை மீனவர்கள்!
TAGS :
COMMENTS