[ad_1]





Chennai: 'அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில், அன்புச் செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்திரிக்கப்படுவது வேதனை' என்று இயக்குநர் சீனு ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார். 





இயக்குநரும், நடிகருமான சசிக்குமாரின் உறவினர் அசோக் குமார், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். அன்புச் செழியன் என்பவரிடம் வாங்கிய கடனுக்காக தொல்லை அதிகரிக்கவே, அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அசோக் குமார் எழுதிவைத்த கடிதத்தின் அடிப்படையில், அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 
 

அசோக்குமாரின் உடல், மதுரை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் நேற்று அடக்கம்செய்யப்பட்டது. இதில், தமிழ்த் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலிசெலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ;அன்புச் செழியனுக்கு ஆதரவாக யார் வந்தாலும் விடமாட்டோம்’ என்று கூறியிருந்தார். ஆனால், அ'சோக் குமாருக்கும் தங்கள் நிறுவனத்துக்கும் எந்த வரவு-செலவும் இல்லை' என்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டிருந்தது. 




இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி போல இல்லை இன்றைய நடிகர்கள். அன்புச் செழியன் போன்ற உத்தமர்கள், ஏனோ தவறாகச் சித்திரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே...’ என்று சீனு ராமசாமி கூறியுள்ளார்.  
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");