[ad_1]

Madurai: பிரபுதேவா நடித்த 'நினைவிருக்கும் வரை' படத்தில் சின்ன ரோல் செய்து தமிழ் சினிமாவில் காமெடி நாயகனாக அடி எடுத்து வைத்தவர் நடிகர் சூரி. இந்தப் படத்துக்கு பிறகு 'சங்கமம்', 'ஜேம்ஸ் பாண்டு', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'காதல்' எனப் பல படங்களில் சின்ன ரோல் செய்து கொண்டிருந்த சூரிக்கு பெரிய அறிமுகமாக அமைந்த திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு'. 




இந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து காமெடி ரோல் செய்து கொண்டிருந்த சூரி சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து காமெடி செய்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத  வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்'  படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 


தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சூரி சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே தனது சொந்த ஊரான மதுரையில் டீ கடை நடத்தி வந்தார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்துப் பிரபலமான பிறகும் அவர் தொடர்ந்து தனது  டீ கடையை  நடத்தி வந்தார். மதுரை புதூர் ஏரியாவில் சூரியின் டீ கடையான 'அம்மன் 'பயங்கர ஃபேமஸ். மதுரையில் மட்டும் சூரிக்கு சொந்தமான டீ கடைகள் மொத்தம் ஆறு உள்ளது. இந்நிலையில் தனது சொந்த தொழிலை சற்று உயர்த்த முடிவு செய்த சூரி, தனது அண்ணன் தம்பிகள் ஐந்து பேருடன் சேர்ந்து மதுரை காமராஜர் சாலையில் அம்மன் சைவ உணவகத்தைத் திறந்திருக்கிறார். இந்த ஹோட்டல் திறப்பு விழாவை முன்னின்று நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்திருக்கிறார். மேலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் அன்பு செழியன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.