[ad_1]





`மெர்சல்' படம் துவங்கியதிலிருந்தே பல சர்ச்சைகளைச் சந்தித்துவருகிறது. படத்தின் போஸ்டர், டீசர் ஆரம்பித்து வெளியாகும் நாள் வரை பல வடிவங்களில் பிரச்னைகள் வந்தன. அது, படம் வெளியான பின்பும் முடியாமல் நீண்டுகொண்டிருக்கிறது. படத்துக்காக சந்திந்த விமர்சனங்களைத் தாண்டி, படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, இலவச மருத்துவம், மெடிக்கல் எரர் எனப்படும் மருத்துவத் தவறுகள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பி.ஜே.பி மற்றும் மருத்துவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதில் படக்குழுவினருக்கும், விஜய்க்கும் ஆதரவாக பலரிடமிருந்து ஆதரவு கிடைத்துவருகிறது.





படத்தின் காட்சிகளை நீக்குவதுகுறித்து எழுந்த சர்ச்சைக்கு, “ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். 'மெர்சல்' திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களைத் தெளிவான புரிதலுடன்கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயடைக்கச் செய்யாதீர்கள்.  விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிரவைக்கும்” என படத்தை எதிர்ப்பவர்களுக்குப் பதிலடிகொடுத்தார், கமல். தற்போது `மெர்சல்' திரைப்படத்தை பாராட்டும் விதமாக, `முக்கியமான விஷயம் பற்றிப் பேசியிருக்கிறார்கள்... பாராட்டுகள்' எனப் படக்குழுவினரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்