[ad_1]





நடிகர் மற்றும் இயக்குநரான சசிக்குமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்  நிறுவனத்தைப் பார்த்துவந்த அவரது அத்தை மகன் அசோக் குமார், நேற்று முன்தினம் தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அவர் எழுதிவைத்த கடிதத்தில், சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் கொடுத்த நெருக்கடியினால்தான் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். 




அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் பலரும் அன்புச் செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில், நேற்று இயக்குநர் சீனு ராமசாமி, அன்புச் செழியனை உத்தமன் என்று ட்வீட் செய்திருந்தார். தற்போது, இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 




அதில்,’நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் அன்புச் செழியனிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்துவருகிறேன். அதை, முறையாகத் திரும்ப செலுத்தியும்வருகிறேன். இதுநாள் வரை அன்புச் செழியன் என்னிடம் சரியான முறையில்தான் நடந்துவருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்திரிப்பதாகத் தோன்றுகிறது’  என்றும், அறிக்கையை முடிக்கும் போது, ‘எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக்கொண்டிருக்கிறேன் RIP - திரு. அசோக் குமார்’ என்று முடித்திருக்கிறார்.  
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");