[ad_1]

Chennai: 

சென்னை ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கிண்டியில் ஐஐடி செயல்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள் உட்பட இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். அண்மைக்காலமாக சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் மற்றும் தற்கொலை முயற்சி உள்ளிட்டவை நடந்துவருகிறது.

இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சக மாணவர்கள் அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


மாணவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.