[ad_1]





Chennai: கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





இரண்டு வாரத்துக்கு முன்னர், ஆனந்த விகடன் வார இதழில் நடிகர் கமல்ஹாசன் பினராயி விஜயன் கேள்விக்குப் பதில் அளித்திருந்தார். அதில், இந்து தீவிரவாதம் என்று வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, நாடு முழுவதிலும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. இதற்கிடையில், 'இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் கூறி, இந்துக்கள் மனதைப் புண்படுத்தியுள்ளார். அவர்மீது வழக்குத் தொடர வேண்டும்' என்று தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.




இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");