[ad_1]





சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம், கொடிமங்கலம். இந்த ஊரில் 40-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடியிருந்துவருகிறார்கள். கடந்த ஆறு ஆண்டு காலமாக குடிதண்ணீருக்கு தவியாய் தவித்துவருகிறார்கள் அந்த கிராம மக்கள். ``இதுவரை நான்கு முறை மூன்று கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. புதிதாக வந்திருக்கும் கலெக்டராவது எங்களது குடிதண்ணீர் பிரச்னையைத் தீர்த்துவைப்பார் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம்'' என்ற மக்களிடம் பேசினோம்…


     



``கொடிமங்கலம் கிராமத்தில், பட்டியல் இன மக்கள் ஏரியா தனியாக இருக்கிறது. அங்கே, எங்களுக்கென்று சின்டெக்ஸ் டேங்க் இருந்தது. அது பழுதாகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எங்கள் பகுதியிலிருந்த ஊரணியில் இருந்த கொஞ்சத் தண்ணியும் விவசாயத்துக்குப் பயன்படுத்திவிட்டார்கள். குளிப்பதற்கு நாங்கள் 3 கிலோ மீட்டர் தூரம் காடணி கிராமத்துக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள் எல்லாம் அந்த கிராமத்தில் போய்தான் குளிக்கவேண்டி இருக்கிறது. அப்படிச் சென்றாலும், அந்த கிராம மக்கள் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். திருமணம், சாவு போன்ற நிகழ்வுகளுக்குக்கூட நாங்கள் தண்ணீர் இல்லாமல் டேங்கர் லாரியில் தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், இளையான்குடியிலிருந்து வரும். அதில், குடம் ரூபாய் 10 கொடுத்து வாங்கிக் குடிக்கிறோம். ஆனால், மேல் சாதிமக்கள் இருக்கும் பகுதிகளில் காவேரி கூட்டுக் குடிநீர் வருகிறது. நாங்கள் அந்தப் பகுதிக்கு தண்ணீர் எடுக்கப் போனால் அவர்கள் பிடித்தது போகத்தான் நாங்கள் பிடிக்க வேண்டும். அதற்குள் அந்த்த தண்ணீரும் நின்றுவிடும். இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் எங்கள் ஊருக்கு பஸ் வசதி கிடையாது. 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து இளையான்குடி அல்லது தாயமங்கலம் ஆகிய ஊர்களுக்குப் போய், பஸ் ஏற வேண்டியிருக்கிறது. புதுக்குளம் கிராமத்திலிருந்து வரும் தண்ணீரை, மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுகிறார்கள். அந்தத் தொட்டியில் இரண்டு வால்வு இருக்கிறது. எங்களுக்கான வால்வு எப்போதுமே அடைக்கப்பட்டு இருக்கும். நாங்கள் மேல்சாதி மக்களிடம் கேள்வி கேட்க முடியாமல் இருக்கிறோம்'' என்கிறார்கள் வேதனையோடு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");