[ad_1]

மதச்சார்பின்மை என்ற வார்த்தையே மிகப்பெரும் பொய் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.






சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், “இந்தியா விடுதலை அடைந்தபிறகு, இங்கு சொல்லப்பட்டு வரும் மிகப்பெரும் பொய்யான வார்த்தை மதச்சார்பின்மை என்பதுதான். இந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்தவர்களும் அதைப் பயன்படுத்துபவர்களும் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இங்கே எந்த அமைப்பும் மதச்சார்பற்றது அல்ல. அரசியல் அமைப்புகள்கூட நிபந்தனைகளுக்கு உட்பட்டே நடுநிலையாக உள்ளன” என்றார்.
 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 
யோகி ஆதித்யநாத்தின் இந்தக்கருத்துக்கு காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார். “மதச்சார்பின்மை பொய்யென்றும், மோடியின் ஆட்சி ராம ராஜ்ஜியம் போன்றது என்றும் யோகி பேசியுள்ளார். இதுதான் மிகப்பெரும் பொய்” என்று கபில் சிபல் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");