[ad_1]





நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கைகையை அமல்படுத்தியது. இன்றுடன் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பணமதிப்பிழப்பு தொடர்பான பல ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.




அவரது ட்வீட்களில், `ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு அரசால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அயராது ஆதரவு கொடுத்த இந்திய மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். 125 கோடி இந்தியர்கள் ஒரு போர் தொடுத்து அதில் வெற்றிக் கண்டிருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது பக்கத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மக்கள் `நரேந்திர மோடி  ஆப்' மூலம் கருத்து கூறுங்கள் என்று சொல்லியுள்ளார். பணமதிப்பிழப்பின் நன்மைகள் குறித்து ஒரு குறும்படத்தையும் மத்திய அரசு வெளியுட்டுள்ளது. இதையும் மோடி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு, இந்நாளை கறுப்பு பண ஒழிப்பு நாளாக கடைபிடிக்கிறது. அதே வேளையில் எதிர்க்கட்சிகள் இந்நாளை கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.  
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்