[ad_1]
மும்பையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து இன்று பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியிருப்பவர் வித்யாபாலன். பாடல்களுக்கு மட்டும் நடனமாடிவிட்டுப் போகும் கதாபாத்திரமாக இல்லாமல், தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை, கதைகளைத் தேடித் தேடி தேர்வு செய்பவர்.
அவர் நடித்து வெளியாகவிருக்கும் படம் ’தும்ஹாரி சுலு’. இந்தப் படத்துக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவர், ’நீங்கள் தொடர்ந்து பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்களாக நடிப்பீர்களா அல்லது கிளாமர் ரோல்களுக்காக உடல் எடையைக் குறைப்பீர்களா” என்று கேள்வி கேட்டார். கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை நோக்கி “இரண்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது” என்று பதில் கேள்வியை எழுப்பினார் வித்யாபாலன். மேலும், தான் செய்யும் வேலையை விரும்பிச் செய்வதாகவும், மாற வேண்டியது உடல் எடை குறித்தான மக்களுடைய எண்ணமே தவிர தன்னுடைய எடை இல்லை என்ற பதிலுடன் வித்யாபாலன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, கிளம்பிவிட்டார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
’சமூகத்தின் எண்ணம்தான் மாற வேண்டும்; என்னுடைய எடை அல்ல!’ அசத்திய வித்யாபாலன்
TAGS :
COMMENTS