[ad_1]
மேலூர் ஒரு போக பாசன விவசாயிகள், பெரியார் - வைகை நீருக்காகக் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் திறந்துவிடக்கோரி முயற்சி எடுத்துவந்தனர். சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க 2 நாள்களுக்கு முன் மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, இதுதொடர்பாக விவசாயிகள் வலியுறுத்தினர். அதற்கான ஏற்பாடுகளை மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் செய்தார். அதைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். அதிகாரிகள் கையைவிரித்த நிலையில், கண்டிப்பாக குடிநீருக்காகவாவது உங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், அதிகாரிகள் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்கும் ஏற்பாடுகளைச் செய்யாததால், நேற்று விவசாயிகளுடன் கைகோத்து, மேலூர் இளைஞர்களும் பெண்களும் மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் போராட்டத்தில் குதித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதைத் தொடர்ந்து, பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். விவசாயத்துக்காக இல்லாவிட்டாலும் குடிநீருக்காக வைகை அணையிலிருந்து 7 நாள்களுக்கு அரசு தண்ணீர் திறப்பதை எண்ணி, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து, கள்ளந்திரி அணையிலிருந்து அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் இன்று காலை தண்ணீர் திறந்துவிட்டனர்.
கள்ளந்திரி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் செல்லும் மேலூர் கால்வாயில், மேலூர் கார் ஸ்டாண்டு பகுதியில் உள்ள கட்டணக் கழிப்பறையிலிருந்து வெளியாகும் கழிவுகள் கலந்துவருகின்றன. இதனால் சாக்கடையாக மாறி உள்ள மேலூர் கால்வாய், சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் சாக்கடையாக இருப்பதுகுறித்து மேலூர் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிதண்ணீராக மாறப்போகும் இந்தத் தண்ணீரில் சாக்கடை கலந்தால், பெரும் சுகாதாரக் கேடு ஏற்படும். எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக கால்வாயைச் சுத்தம்செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சாக்கடையாக மாறிப்போன மேலூர் கால்வாய்! குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும் சுத்தம்செய்யப்படாத அவலம்
TAGS :
COMMENTS