[ad_1]





அமைச்சர் செல்லூர்ராஜுவை மிஞ்சும் வகையில் பேசுவதில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்குள் பெரும் போட்டியே நடக்கிறது. நேற்று மாலை விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, `கமல்ஹாசன் எங்களை குறை சொல்லி எழுதுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். சினிமாவில் வேண்டுமானால் அவர் உலகநாயகனாக இருக்கலாம். உண்மையில் அவரால் ஒரு வரலாற்று நாயகனாக முடியாது' என்று பேசியுள்ளார்.




அவர் மேலும், `மக்களுக்காக கமல் இதுவரை களத்தில் இறங்கி என்ன செய்தார். ஒரு இடத்துக்குச் சென்று பார்வையிட்டால் போதுமா?சுனாமி வந்தபோதும் வர்தா புயல் வந்தபோதும் எங்கு போனார். ஜெயலலிநா இல்லை என்பதால் அந்த இடத்தை நிரப்ப பலர் நினைக்கின்றனர். ஜெயலலிதா இல்லாவிட்டாலும், அம்மாவின் சிங்கக்குட்டிகள் நாங்கள் இருக்கிறோம். பிரதமர் மோடியுடன் இணங்கி செல்வது தமிழக மக்களின் நன்மைக்காகவே. இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் இந்த ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அவர்  சொல்லிக்கொண்டே இருக்கட்டும் நாங்கள் ஆட்சி செய்து கொண்டே இருப்போம்" என்று அதிரடியாக பேசிவிட்டு சென்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்