[ad_1]





Chennai: `அட்டக்கத்தி' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். சூது கவ்வும், ஜிகர்தண்டா , குக்கூ, கபாலி போன்ற பல முக்கிய திரைப்படங்களுக்கு இவரது இசையமைப்பில் வெளிவந்துள்ளன. இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் `நிறத்தைவைத்து தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.




 

இது குறித்து அவர், `சிட்னியிலுள்ள விமான நிலையத்தில் அதிகாரிகள் தொடர்ந்து  எட்டாவது முறையாக என்னை 'இரசாயண பொருள் சோதனை'க்கு உட்படுத்தியுள்ளனர். கடுமையான முறையில் என்னை அதிகாரிகள் நடத்தி அவமதித்துள்ளனர். இதுபோன்ற நிறத்தைவைத்து தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும்' என்று சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்நது வெளிநாடுகளின் விமான நிலையங்களில் இந்திய பிரபலங்களுக்கு இதைப் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதேபோல ஹிந்தி நடிகர் ஷாருக்கானும் விமான நிலையத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்டதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");