[ad_1]





திரைப்பட விழாவில் பங்கேற்க தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 





மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 17-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் சென்றிருந்தார். மேலும் இந்த விழாவில் நடிகர் அமிதாப் பச்சன், காஜோல் பங்கேற்றனர். அப்போது, கமல், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், 'என்னை அழைத்ததற்கும், சிறந்த சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தியதற்கும் நன்றிகள். நானும், அந்தக் குடும்பத்தில் அங்கமாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். ஒற்றுமைக்கும், பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள்' என்று பதிவிட்டுள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்