[ad_1]

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் பள்ளிக் கட்டடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் ஆசிரியராக மாறி சிறிது நேரம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.




அமைச்சர் ஜெயக்குமார் இன்று ராயபுரம் மாநகராட்சிப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டத்தை இன்று திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்த உடன் புதிய கட்டடத்துக்கு ஒரு வகுப்பில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார், 'H2O' என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினார். பின்னர் 'H2O' என்பதை கரும்பலையில் எழுதி, அதற்கான விளக்கத்தை அளித்தார். மேலும், 'நல்லவனாய் இரு, நல்லதே செய்' (Be Good Do Good) என்பதை ஆங்கிலத்தில் 'Be good, Do good' என்று கரும்பலையில் எழுதி, அதற்கேற்ப வாழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.