[ad_1]

"எடப்பாடி அரசு வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பம்” என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.




கோவைக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஆளுநரின் செயல்பாடு, 'மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது' என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன.


ஆனால், ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை; இது ஆரோக்கியமான ஒன்றுதான் என அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ஆளுநரின் ஆய்வுகுறித்து டி.டி.வி. தினகரன் கூறுகையில், “தமிழக ஆளுநரின் ஆய்வு, மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகத்தான் உள்ளது. மக்கள் விரோத எடப்பாடி அரசு வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பம். தற்போது நிகழ்பவை எல்லாம் இதற்கான முன்னோட்டமாகத்தான் பார்க்க வேண்டி உள்ளது” எனக் கூறியுள்ளார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");