[ad_1]





கோவை மத்திய சிறை வளாகத்தில், நேற்று அதிகாலை 4 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்த முயற்சி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.




கோவை காந்திபுரத்தில், மத்திய சிறை வளாகம் உள்ளது. அங்கு உள்ள சிறை டி.ஐ.ஜி அலுவலகம் அருகேதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 20 இன்ச் சுற்றளவு கொண்ட இந்த மரங்கள் நேற்று அதிகாலையில் வெட்டப்பட்டுள்ளன.

சந்தன மரத்தை வெட்ட பயன்பட்ட ரம்பம், அரிவாள், கடப்பாறை ஆகியவற்றை கடத்தல்காரர்கள் அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். கோவை மத்திய சிறையின் முதல் அடுக்கில் தமிழக போலீஸார், இரண்டாம் அடுக்கில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை, சிறைக்குள் சிறைக் காவலர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அப்படியிருக்கையில், பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதால், அதன்  பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து,  ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");