[ad_1]




நடிகர் ரஜினிகாந்த்தின் விளக்கத்தை ஏற்று, 'காலா' படத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, உயர் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

'காலா' படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு உரிமை கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித் மற்றும் பட நிறுவனம் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, மூன்று பேர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், விளம்பர நோக்கத்துடன் 'காலா' படத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு பதிவுசெய்த 'கரிகாலன்' தலைப்பை 2006-க்குப் பிறகு மனுதாரர் புதுப்பிக்கவில்லை. தேவையில்லாமல் ரஜினியை எதிர் மனுதாராக வழக்கில் சேர்த்துள்ளார். காப்புரிமை விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை நாடாமல், உரிமையியல் நீதிமன்றத்தை நாடியதும் தவறு. இதனால், மனுவைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்"; என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஜினிகாந்த்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராஜசேகரின் மனுவைத் தள்ளுபடிசெய்ததோடு, உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.