[ad_1]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை வளங்களான நீர்நிலைகள் காடுகளை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் தலைமையில் ப்ரண்ட்ஸ் ஆப் நேச்சர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தாய்த் தமிழகத்தோடு இணைந்த இந்த நாளில் (நவம்பர் 1-ம் தேதி) இந்த அமைப்பு தொடக்க விழா ஆத்தூர் பகுதியில் நடந்தது. இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்த குலசேகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆற்றுர் பள்ளி வரையிலான விழிப்புஉணர்வு மாரத்தான் ஓட்டம் பந்தயம் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு குலசேகரம் -ஆற்றூர் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. தி.மு.க. கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.
குமரியில் இயற்கையை காப்பாற்ற விழிப்புஉணர்வு மாரத்தான்!
TAGS :
COMMENTS