[ad_1]





'குஜராத் தேர்தல் தொடர்பான விளம்பரங்களில், 'பப்பு' என்ற வார்த்தையை பா.ஜ.க பயன்படுத்தக்கூடாது' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 





குஜராத் மாநிலத்தில், டிசம்பர் 4-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனது. பா.ஜ.க சார்பில் தேர்தல் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்காக, விளம்பரத்தில் இருக்கும் வார்த்தைகள் உச்சரிப்பு குறித்த விளக்கத்தைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர். அதில், 'பப்பு' என்ற வார்த்தை இருந்துள்ளது. தேர்தல் ஆணையம், அந்த வார்த்தைக்கு ஆட்சபனை தெரிவித்து, அதை நீக்கச் சொல்லியுள்ளது. ஏற்கெனவே, அக்டோபர் 31-ம் தேதி, 'பப்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கடிவாளம்போட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பா.ஜ.க மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முயற்சி செய்தபோது, 'பப்பு' என்ற வார்த்தை தனிப்பட்ட ஒரு நபரை குறிப்பிடுவதாகக் கூறி, அந்த வார்த்தையைப் பயன்படுத்த மீண்டும் தடைசெய்தது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");