[ad_1]
Coimbatore: ஆளுநர் ஆய்வுக்கு தமிழக அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்ததற்கு எதிராகப் பேசியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர்.
கோவைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, 'ஆளுநரின் செயல்பாடு, மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது' என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன. ஆனால், ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை. இது, ஆரோக்கியமான ஒன்றுதான் என அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், “பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எல்லாம், மாவட்டம் தோறும் ஆளுநர்கள் ஆய்வு நடத்துவார்களா? தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தால் வீட்டுக்குச் செல்லவேண்டியதுதான்” எனக் கூறியுள்ளார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆளுநர் ஆய்வை வரவேற்ற அமைச்சர்கள்! - கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்
TAGS :
COMMENTS