[ad_1]





மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான  கோடநாடு எஸ்டேட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.




சசிகலாவின் ஆதரவாளர்கள் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆபரேஷன்  க்ளீன் பிளாக் மணி என்ற பெயரில், சசிகலா, ஜெயா டி.வி, தினகரன், திவாகரன் சம்பந்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

முக்கியமாக, நீலகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டுக்குள், காலை 6 மணி அளவில் நுழைந்தனர்.

சுமார் மூன்று வாகனங்களில் வந்த, 10-க்கும்  மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை வருமானவரித்துறை அதிகாரிகள்தான், கோடநாடு பங்களாவில் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருமானவரித்துறைச் சோதனையால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. வருமான வரித்துறை சோதனை காரணமாக, கோடநாடு எஸ்டேட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.


அதேநேரத்தில், கோவையில் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெறவில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்