[ad_1]





Coimbatore: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி அரசு கொண்டாடி வருகிறது. அதன் ஒருகட்டமாக, கோவை வ.உ.சி மைதானத்தில், வரும் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவிற்கான கால்கோல் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.




இந்த விழாவில் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன் , திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் . 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், வேலுமணி, ’ஜெயலலிதா நினைத்தபடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும், அரசு சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். கோவையில் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும். குறிப்பாக, கோவையில் நடக்கும் கூட்டம் அனைத்து மாவட்டங்களை விட சிறப்பாக இருக்கும்’ என்றார். 


 


இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜ்யசபா எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், எம்.எல்.ஏ-க்கள் அம்மன் அர்சணன், அருண், ஆறுக்குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");